இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அதுதான் ஆகாய விமானமாய் உண்மை உருவம் கொண்டது. ෆ நிலா நிலா வா வா என்று அழைத்தான் கவிஞன் சந்திரமண்டலம் போக சாதனை புரிந்தான், உழைத்தான் அறிவியலறிஞன். இன்று நிலவுலகமும் நிலவு உலகமும் நெருக்கம் கண்டது. இனிமேல் வீரமுள்ள இளங்காதலர்கள் தேன்நிலவுக்கு உதகமண்டலம் போகவேண்டாம்.... சந்திரமண்டலம் போகலாம். சந்திரமண்டலத்தியல் தெளிவோம் என்ற பாரதி மங்கியதோர் நிலவினிலோர் அழகுத் தெய்வத்தை ஆராதனை செய்து பொங்கிய கவிதைகளைப் புசிக்கிறோம் பொங்கலாய். ○ உப்பில்லாத சமுதாயத்தை ஒப்பில்லாத சமுதாயமாகக் கோடையும் வசந்தமும் 0 187