உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை கனவுகள் கண்டான்... அவை வெறுங் கனவுகளா? காலத்தை வென்று நிற்கும் திட்டங்கள்! சட்டங்கள்! ඌ இனி கவியின் கனவை கற்பனை என்று தள்ளாதீர்கள். அந்தக் கனவுகளில் ஆயிரம் தீபங்கள் சுடர்விடலாம். வெறும் மண்தானே என்று விலக்காதீர்கள்.... அதனுள் ஆயிரம் கிலோ தங்கம் புதைந்திருக்கலாம். உப்புக் கடல் தானே என்று ஒதுக்காதீர்கள்... அதன் அடியில்தான் விலை மதிப்பற்ற முத்துக்கள் மூழ்கிக் கிடக்கலாம். கவிஞனின் கனவைப் பொய் என்று புறக்கணிக்காதீர்கள் அதில்தான் காலங்காலமாய் வாழும் உண்மைகள் உறங்கிக் கொண்டிருக்கும் சத்தியங்கள் சயனித்துக் கொண்டிருக்கும். 188 0 மீரா