தந்து, அரிதாகச் சினிமாவிற்குப் புறப்படும் போது சிட்டாய் ஒட்டி, வெளியூர் போகும்போது வாங்கி வரவேண்டியவை களுக்குப்பட்டியலிட்டு உத்தரவிடும் உரிமையினைப் பெற்ற சிறுமி ஒரு நாள் ஆளாகிவிட்டதும் எப்படி நாணத்தோடு நடந்து கொள்கிறாள் என்பதை எளிமைச் சிற்பமாய் வடிக்கிறார் மீரா. 'இப்போதெல்லாம் என்னைப் பார்த்ததும் முகத்தில் வெட்கத்திரையை வேகமாய்ப்போட்டுத் தன் அறைச்சன்னலைச் சாத்தி விடுகிறாள் அவள் பெரிய மனுவி ஆகிவிட்டாளாம்" என்று முடியும் போது கவிதையும் ஒரு பக்குவப்பட்டு விட்டதைப் பார்க்க முடிகிறது. இந்தத் தொகுப்பில் குறுங்கவிதைகளும் நெடுங்கவிதைகளுமாக ஐம்பதுக்கு மேற்பட்ட கவிதைகள் அடங்கியுள்ளன. நீண்ட கவிதைகளிலொன்று 'பாம்புகள் பலவிதம்'. வார்த்தைகளுக்குக் காத்து நிற்கத் தேவையில்லாத மீராவின் சிந்தனை நேர்த்திக்கு - நீரோட்டம் போன்ற ஒட்டத்துக்கு உதாரணமாகும் இந்தக் கவிதை. பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடி அடங்குகிற பாம்பு ஆதிமனிதராகிய ஆதாம் ஏவாளிலிருந்து இதுவரை மனிதரை எவ்வெவ்வாறு ஆட்டி வைக்கிறது என்பதைப் பலபட அடுக்குகிறார். சபலத்தை ஊட்டி சஞ்சலத்தை உண்டாக்கி அந்த அற்புத முதல் ஜோடியை ஒரு பாம்பு விழவைத்ததிலிருந்து மனிதன் எப்படி விழுந்து விழுந்து எழுகிறான், எழுந்தெழுந்து விழுகிறான் என்பதை 17
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/19
Appearance