உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கோ இருந்தோ கேட்கும் ஒரு குரல்: 'நீ ஆத்திகனா....? நாத்திகனையும் வணங்க வைக்கும் நல்ல கடவுள் இதோ என்று நா முழங்கியதும் அது அப்படியே அடங்கும். ஒடுங்கும். விடைபெறும் இந்த வேளையில் விசித்திரமாய்ச் சிரித்துக் கொள்கிறேன்.... ஒரு நாளேனும் ஒரு பொழுதேனும் உன் நெற்றிக்கண்ணால் என்னை நீ நேர்கொண்டு பார்க்கவில்லை.... நக்கீரனாகும் ஒரு நல்ல வாய்ப்பு வராமலேயே நழுவிவிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.... கோபத்தின் உச்சியிலிருந்து அன்பு மூலிகை மனக்கக் கொட்டும் ஒரு குற்றால அருவியில் குளித்தெழுவதற்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று கொஞ்சம் கவலைப்படுகிறேன். நான் உன்னிடம் வெறும் மழைநீராக வந்தேன்... இப்போது ஒரு மகாநதியாய்ப் பிரவாகமெடுத்துப் புறப்படுகிறேன். ஒடும் வழிகளிலெல்லாம் கரைகளில் நின்று காது கொடுப்போர்களிடமெல்லாம் உன் நற்பெயரை இசைத்துக்கொண்டே போவேன். கோடையும் வசந்தமும் 0 195