பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமையில் மேடையேறிய கவிதைகளின் தொகுப்புதான் இந்நூல். இந்நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக விருது கிடைத்தது. தொடர்ந்து மண்ணியல் சிறுதேர் - ஒரு மதிப்பீடு என்ற திறனாய்வு நூல் வெளிவந்தது. மீராவை வெளி உலகத்திற்கு கவிதை உலகையும் தாண்டி அடையாளம் காட்டியது 1971-ல் வெளிவந்த 'கனவுகள்+கற்பனைகள்-காகிதங்கள் என்ற கவிதை நூல்தான். அதை மீரா தீட்டிய வசன கவிதை ஒவியம் என்று கூடச் சொல்லலாம். தமிழ் ஆர்வமுள்ள இளைஞர்கள் பலரை அது கொள்ளை கொண்டது. மீராவின் அலை" இளைஞர்கள் மத்தியில் சுழன்று வீசியதும் இந்தக் கவிதை நூலால்தான். அந்த அலையில் சிக்கிய பல இளைஞர்களை, காதல் கவிதைகள் எழுத வைத்ததும் இந்நூல்தான். காதலை அழகு, நிரந்தரத்துவம் என்று எதுவாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்நூலின் மூலம் காட்டியவர் மீரா. மீராவின் அலை 1974-ல் வேறு விதமாக வீசியடிக்கத் தொடங்கியது. புதுக்கவிதை உலகின் ஆசுகவி என்று சொல்லும் அளவிற்கு இவரை உயர்த்திப் பிடித்தது இவரது 'ஊசிகள் என்ற கவிதை நூல். இடதுசாரிச் சிந்தனை உள்ள கவிஞராக மீரா அறியப்பட்ட அந்தக் காலத்தில் பொய் முகங்களின் அரிதாரங்களில் ஊசிகள் ஊடுருவிப் பாய்ந்தன. மீராவின் இன்னொரு பரிமாணம் எது என்பதை காட்டிய நூல் 'ஊசிகள். தாமரை, தீபம், வானம்பாடி, சுவடு போன்ற இலக்கிய ஏடுகள் மீராவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டன. இதழ்கள் நடத்த வேண்டும் என்ற ஆர்வம் மீராவின் உள்ளுக்குள் வளர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. அதன் விளைவாக கவி, அன்னம்விடு தூது போன்ற இலக்கிய ஏடுகளைத் துவங்கி சிலகாலம் நடத்திவந்தார். 'ஓம் சக்தி' 203