பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறந்து விடுவதென்று சத்தியம் பண்ணிக் கொண்டு நினைப்பதே இல்லையென்று கங்கணங்கட்டிக் கொண்டு ஆள்கிறவர்கள் பூமியிது. இந்த ஏழை மகனுக்கு நிம்மதி எங்கு வரப் போகிறது என்று ஏங்கி எண்ணிப் பார்த்ததால் விளைந்த கவிதை இது. படிக்கிறவனை ஒரு நேரத்தில் உருகவைப்பது; ஒரு நேரத்தில் நெஞ்சில் சினம் பெருக வைப்பது. 'கோடையும் வசந்தமும் தொகுதியில் காணும் சின்னச் சின்னக் கவிதைகளிலும் மீராவின் கைவந்த தொழில் நுணுக்கம், கலை நயம் புலப்படும். 'ஏலம் என்ற தலைப்பில் ஒரு சிறுகவிதை; வானம்பாடி இதழ் ஒன்றில் வந்ததாக நினைவு...... குட்டி நடிகையாய்க் கோடம்பாக்கக் குளுகுளு அறையில் அறிமுகமானபோது..... அவள். பிரபலமாகிப் பின்னால் ஒரு நாள் நாடி நரம்புகள் தளர்ந்து சாய்ந்த போது..... அவள் வீடு. கவிதையைப் படித்து விட்டு தலைப்பை இன்னொரு முறை பாருங்கள். அர்த்தம் உங்கள் செவிகளை அறையும். நிறையக் கவிதைகளைப் பற்றி நிறைய நிறையப் பேசலாம். பலவேறு பொழுதுகளில் சந்தர்ப்பங்களில் படைத்தவற்றைப் பதுக்கி வைத்திருந்து பtரா வெளியிடுகிறார். 19