பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சட்டைப்பை, காற்சட்டைப்பை, கைப்பை இவற்றில் வைத்திருந்த பணத்தைப் பயணம் போகும் போது பலதடவை பறிகொடுத்திருக்கிறேன். கூடவே கைப் பையில் உள்ள சாவிகளையும் இழந்திருக்கிறேன். ஒருமுறை சென்னையில் பெரியமேட்டிலிருந்து பேருந்தில் ஏறி பாரிமுனை பூக்கடை நிறுத்தத்தில் இறங்கி காற்சட்டைப்பைக்குள் கையை விட்டுப் பார்த்தபோது அதிலிருந்த இரண்டாயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது. பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறிச்செல்லப் போதிய சில்லறையும் இல்லாமல் நடந்தேன். தலைமைச் செயலகம் வரை நடந்தேன். அன்றைய தமிழ்ப்பண்பாட்டுச் செயலாளர் முனைவர் ஒளவை நடராசன் அறைக்குள் சென்று சோர்ந்து போய் உட்கார்ந்தேன். என்ன ஐயா..... இப்பிடி’ என்று கேட்டார். பணத்தைப் பறிகொடுத்ததையும் நடராஜன் ஆனதையும் சொன்னேன். அட பாவி, நடந்தேயா வந்தாய்’ என்று கேட்டார். அப்புறம் சிற்றுண்டி வாங்கி வரச் சொல்லி உண்ணச் சொன்னார். 'வந்த வேலை முடியவில்லை ஊருக்குப் போக வேண்டும். 500 ரூபாய் மட்டும் கொடுங்கள். போய் அனுப்பிவைக்கிறேன் என்றேன். சரி என்று பையைத் திறந்து எடுத்துக் கொடுத்தார். ஊர்வந்து சேர்ந்ததும் திருப்பி அனுப்பினேன். 21