பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனைவிடக் கசப்பான அனுபவம் சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நேர்ந்தது. ஒம்சக்தி'யில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்: கோவை குண்டு வெடிப்பை ஒட்டி சிவகங்கை வந்திருந்தேன். 'ஒரு வாரம் ஊரிலேயே இருங்கள். நிலைமை சரியானதும் வரலாம் என்று பதிப்பாசிரியர் கவிஞர் சிதம்பரநாதன் சொன்னார். அவர் சொன்னபடி மறுவாரம் கோவை புறப்பட்டேன். ஒரு கையில் பெட்டியும் இன்னொரு கையில் புத்தகக் கட்டும் இருந்தன. ஆரப்பாளையம் நிலையத்திலிருந்து கோவை புறப்படும் பேருந்து தயாராக இருந்தது. வேகமாய்ப் போய் ஏறி கடைசி இருக்கையில் கைப்பெட்டியையும் புத்தகத்தையும் வைத்தேன். நடந்துநர் 'சீட்டு வாங்கிக் கொண்டு ஏறுங்கள் என்றார். கீழே இறங்கினேன். என் இருக்கைக்குப் பக்கத்தில் தான் அவர்நின்று கொண்டிருந்தார். சீட்டு வாங்கிக் கொண்டு ஏறி இருக்கையைப் பார்த்தபோது வெறும் புத்தகக் கட்டுதான் இருந்தது. பெட்டியைக் காணவில்லை. அ ைல மோதினேன். வண்டிக்குள் அங்குமிங்கும் தேடினேன். கீழே இறங்கி எடுத்தவன் தட்டுப்படுகிறானா என்று பார்த்தேன். நடத்துநர் வண்டியில் ஏறிவிட்டார். வண்டி புறப்படும் நேரம். பெட்டியை காணவில்லை என்று சொன்னேன். சீட்டை வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்தார். ஆரப்பாளையம் காவல் நிலையம் போங்கள் என்றார். வேறு வழியில்லாமல் காவல் நிலையம் போனேன். புகார் எழுதிக் கொடுத்தேன். ஆய்வாளர் வரட்டும் என்றார்கள். காத்திருந்தேன். தலைமைக் காவலர் ஒருவர் அங்கே ஒரு பக்கம் உட்கார்ந்திருந்த பத்துப் பதினைந்து பேரைச் சுட்டிக் காட்டி இவர்கள் எல்லாருமே 22