பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயகாந்தன் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகள் இவை எல்லாமே பெட்டியோடு போய்விட்டன. என் எழுத்துக்களை இழந்த வருத்தத்தில் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தேன். ஆய்வாளர் வந்தார். அவரிடம் சொன்னேன். புகார்க் கடிதத்தைக் கொடுத்தேன். காவல் துறை உயர்அதிகாரி கவிஞர் வா.சு.கணபதி என் மாணவர் என்றேன். உடனே தொலைபேசியில் அவரிடம் பேசச் சொன்னார். பேசினேன். அவர் எனக்காக ஆய்வாளரிடம் வேகமாக நடவடிக்கை எடுக்கச் சொன்னார். சரி என்றார். பிறகு என்னிடம் நீங்கள் போய் வாருங்கள். தகவல் தெரிவிக்கிறோம்' என்று என் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டார்கள். முதல் நாள் போரில் தோற்ற இராவணன் போல் நிலை குலைந்ததுபோல் நடத்துநர் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு சிவகங்கைக்கே திரும்பிவிட்டேன். இரண்டு மூன்று நாட்கள் சோகத்தில் மூழ்கினேன். எழுதுவது மில்லை. இப்போது எழுதியதுமில்லை என்று வேதனைப் பட்டேன். சில நாட்களில் கோவை சென்றேன். பூட்டுக்காரரை அழைத்து வந்து வீட்டுக்கதவுகளில் உள்ள பூட்டுக்களை உடைக்கச் சொல்லி உள்ளே சென்றேன். பீரோவை சாவிபோட்டுத் திறந்துவிட்டார். கவிஞர் சிதம்பரநாதனிடம் எல்லாவற்றையும் சொன்னேன். சமாதானப்படுத்தினார். 邻 ఉృe 'ஓம் சக்தி இணையாசிரியர் பொறுப்பிலிருந்து விடுதல் பெற்று வந்ததும் எஞ்சிய கவிதை கட்டுரைகளையாவது விரைவில் அச்சாக்க வேண்டும் என்று எண்ணினேன். கவிக்கோ ரகுமானும் கவிஞர் சிற்பியும் தம்பிகள் பாலாவும், போசும் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் 24