பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரம் அச்சகம் இருந்தபோது ஊரார்க்கெல்லாம் புத்தகம் போட்டீர்கள். உங்கள் புத்தகங்களைக் கொண்டு வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள். அதற்குப் பிறகுதான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். நைந்து பிய்ந்து போன தாள்களிலிருந்து கவிதைகளை எடுக்க ஆரம்பித்தேன். 1965இல் வந்த இராசேந்திரன் கவிதைகள்' நூலை முதலில் எடுத்தேன். அப்போதே அதில் சேர்க்கலாம் என்று ஒதுக்கி வைத்திருந்த கவிதைகள் சிலவற்றையும் தொகுத்து “மீரா கவிதைகள்’ என்று புதுப்பெயர் சூட்டியுள்ளேன். இரண்டாவதாக 'குக்கூ தொகுப்பை முடித்தேன். எஞ்சிக் கிடக்கும் கவிதைகளில் தேர்ந்தெடுத்த சில கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கினேன். இந்தக் கவிதைகள் அனைத்தும் எழுபதுகள் தொடங்கி 2002 வரை எழுதியவை. நெடுங்கவிதைகள், கவியரங்கக் கவிதைகளின் சில பகுதிகள், குறும்பாடல்கள், புதுக் கவிதைத் தோற்றம் எடுத்த சில மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் இப்படி ஒரு கலவையான நூலாக இது அமைந்துவிட்டது. இத்தொகுப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். ஆங்கிலத்தில் Illusion and Reality என்று ஒரு புத்தகம். அந்தத் தலைப்பு மனதில் வந்து நின்றது. அந்த அர்த்ததில் 'கோடையும் வசந்தமும்’ என்று பெயர் வைத்தேன். நியாயமாகப் பார்த்தால் வசந்தமும் கோடையும் என்றிருக்க வேண்டும். சொல்வதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று அப்படி வைத்தேன். எழுபதுகளுக்கு பிறகு என் எழுத்துக்களில் 'பிரச்சாரம்' ஓங்கி ஒலித்தது என்பதை இந்நூல் உறுதிப்படுத்தும். அதற்குக் காரணம் என்னுடைய பொதுவுடைமைச்சித்தாந்த ஈடுபாடு தான். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக