பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரல் கொடுக்க வேண்டும் என்று மார்க்சியம் எனக்கு போதித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சியில் நான் இரண்டறக் கலக்க ஆசைப்பட்டேன். ஒரு பெரிய போருக்குப் படைதிரட்டப் பாடுகிறேன் என்று முழங்கினேன். கழகத்தில் இருந்தபோது நான் எழுதிய கவிதைகளுக்கும் (மீரா கவிதைகள்) இதில் உள்ள கவிதைகளுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. இரண்டிலுமே என் முற்போக்கு, அதிமுற்போக்கு அரசியல் முகங்களே தென்படுகின்றன. நடையில் வீரியக் குறைவு, வார்த்தைகளில் கலப்பு மொழி, சில இடங்களில் செயற்கைத் தன்மை இத்தொகுப்பில் காணப்படுகிறது. அவற்றை எடுத்தெறிய முடியவில்லை. மேலும் அழகுபடுத்த அவகாசம் இல்லை. அப்படியே விட்டு விட்டேன். 4. ** 'கோடையும் வசந்தமும் தொகுப்புக்கு அணிந்துரை அளிக்குமாறு வானம்பாடி இயக்கத் தலைவரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் அறிஞரும் கவிஞருமான சிற்பி அவர்களிடம் வேண்டினேன். கவிதைகளை அனுப்பி வைத்தேன். நான் அவருக்கு இரண்டு முன்னுரை கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு ஒன்றாவது வாங்க வேண்டாமா? என் வேண்டுகோளுக்கிணங்க பச்சைப் பசுந்தமிழில் 'கலாபத்தை விரித்தாடும் போது மயில் கொள்ளை அழகைக் கொட்டுமே, அந்த வசீகர நடையில் எழுதியிருக்கிறார். என் கவிதைகளின் பெருமைகளை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறார். வயதான காலத்தில் விமர்சிக்க வேண்டாம் என்று விட்டுவிட்டார். என் இருவேறு பார்வைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். 26