உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொள்ளாச்சி படப்பிடிப்புக்குப் புகழ்பெற்ற ஊர். என் 'கோடையும் வசந்தமும் படப்பிடிப்புக்கும் நன்றாய் உதவியிருக்கிறது. சிற்பியின் அணிந்துரை உதகைக்கு மலைரயிலில் செல்வது போல் உள்ளது என்றால் தேனரசனின் மதிப்புரை உதகை ஏரியில் படகு சவாரி செய்வது போல் இருக்கிறது. இருவருக்கும் என் வணக்கங்கள். 象 * கவிக்கோ விருதளிப்பு விழாவில் வெளிவரும் மூன்று நூல்களில் இதுவும் ஒன்று. நான் எழுதுவதே இல்லை என்று குறைப்படும் என் சிறிய வாசகர் வட்டத்துக்கு இது ஒரு சிறுதேநீர் விருந்தாய் அமையும் என்று நம்புகிறேன். இத்தொகுப்பை அழகுறத் தயாரித்து, என்னை அவையத்து முந்தியிருக்கச் செய்யும் என் மகன் கதிருக்கும் அகரத்திற்கும் என் இனிய வாழ்த்துக்கள். 2, சிவன்கோயில் தெற்குத் தெரு மீரா சிவகங்கை 3.6.2003 28