பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? நாடும் இனமும்வெவ் வேறெனினும் நம்முடலில் ஒடுங் குருதிநிறம் ஒன்றென்று பாடுகிறேன்; எங்கோ ஒருவன் இலட்சியத்தை மாலையிட்டால் இங்கே அவனுக்(கு) இலக்கியம்நான் பாடுகிறேன்! Ο பொன்னுக்கோ, இல்லை - புகழுக்கோ பாடவில்லை; புன்மை களையும் புரட்சிக்கே பாடுகிறேன். மூளைப் பசியறியா முட்டாளைக் கொண்டாடா நாளைத் திருநாளை நாவாரப் பாடுகிறேன்! பாவ நிழலைப் படியவிடா மல்தடுக்கும் தேவன் வந்தேன் என்று தெம்பூட்டப் பாடுகிறேன்! “தாமரை 0 மீரா