இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என் கழுத்தில் இருந்த பொட்டுத்தாலியும் பட்டுவிட்டது. ஒரு புட்டியோடு பொழுதெல்லாம் மயங்கவும் ஒரு சின்னக் குட்டியோடு முயங்கவும் என் தாலியைத் தட்டிப் பறித்தார் அதுவும் போதாமல் ஆயிரம் ரூபாய்க்கு இந்த விடுதியில் என்னை விட்டு விட்டார்.... விற்று விட்டார்..... O சிந்தை துடித்தேன் திகைத்தேன்..... திரும்பினேன் கலியுகத்தில் காசு நாதர்களின் கையில் சிக்கித் தவிக்கும் மக்த லேனாக்களைக் காப்பாற்ற எந்த ஏசுநாதரும் ஏன் வரவில்லை? இந்திர போகத்துக்கு இரையாகிக் கல்லாய்க் கிடக்கும் அகலியைகளுக்கு 36 0 மீரா