இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இதெல்லாம் முன்னால்..... இப்போதெல்லாம் அவளைக் காணோம்..... என் அறைக் கதவை எட்டித்தள்ளி உள்ளே நுழையும் அவள், இப்போதெல்லாம் என்னைப் பார்த்ததும் முகத்தில் வெட்கத் திரையை வேகமாய்ப் போட்டுத் தன் அறைச் சன்னலை சாத்தி விடுகிறாள்.... அவள் பெரியமனுவி' ஆகிவிட்டாளாம்! 10 0 மீரா