இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மறுபடியும் மறுபடியும் மறுபடியும் என் மனத்தில் ஊர்கின்றன உன் பார்வைகள் பட்டுப் பூச்சிகளாய், மறுபடியும் மறுபடியும் என் உடலில் உயிரில் ஊர்ந்து ஊர்ந்து அரிக்கப் போகின்றன உன் நினைவுகள் கம்பளிப் பூச்சிகளாய். கோடையும் வசந்தமும் O 41