பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○ அவள் விழித்தெழுந்தாள்.... குங்குமக் கடலில் குளித் தெழுந்தாள். செக்கச் சிவந்த மேனி காட்டிச் சொக்க வைத்தாள்..... கண்கள் கூசும் கவர்ச்சி வேடம் போட்டுப் புகழின் உச்சி போனாள் பின்னர் நாடி நரம்புகள் நன்றாய்த் தளர்ந்தன ஆடி முடித்தாள்.... அடங்கிச் சாய்ந்தாள்.... மோகம் பதித்த முகம் சுரந்தது சோகம் படர்ந்தது. சுற்றி நேயர் கூட்ட நெரிசல் கன்னங் கரிய ஆடை கவிழ்ந்தது சவம் - மேற்குத் திக்கில் புதைக்கப் பட்டது. 'ஒருநாள்' வாழ்க்கை ஒய்ந்தது. Ο காலம் ஒரு விளக்கு ஆண்டுகள் - அதன் முகங்கள் மாதங்கள் திரிகள் கிழமைகள் வெளிச்சம் கிளர்த்தும் சுடர்கள் கோடையும் வசந்தமும் O 45