பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்களோ எரிந்து வீழும் விட்டில்கள்! காலம் ஒரு கடல் அதன் மேல் வருடம் காற்றாய் வருடுகின்றது மாதம் அலையாய் மோதுகின்றது கிழமை அடிக்கடி நுரைக் கின்றது வாழ்நாள் - குமிழாய்த் தோன்றி மறைகின்றது. O சிவந்த பகலும் கறுத்த இரவும் சேர்ந் திருக்கும் இரண்டு புறமும் தாள - ஒரு அர்த்தநாரீசர் அதனைப் பகுத்தறிவாளரும் பரவலாம். O நாள் கட்டுப் பாட்டைச் சுட்டிக் காட்டும் ஒரு சிவப்பு முக்கோணச் சின்னம் நேற்று கரைந்து போன கனவு. காளை நம்ப முடியாக் கற்பனை 46 0 மீரா