உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை தந்த மழலை குழலும் யாழும் கொடுக்கும் இசையை இனிதென்றுலகில் இயம்பு வோர்கள் பிள்ளை யில்லாப் பிள்ளை யார்கள். இனிது இனிது மழலை இனிது! மழலை இனிதெனில் மழலையை ஈன்ற மழைமிக இனிதே ஈதென்ன மழையா மழலையை ஈன்றது என்று மலைக்க வேண்டாம். இதோநான் விளக்கம் தருகிறேன். ஒருநாள் இம்மண்ணில் உங்கள் மூதாதையர் மழைநீர் பிடிக்க வைத்த குடத்தில் உலைநீர் போன்ற ஒசையைக் கேட்டனர். ஆ. ஆ மழைநீர் அலைத்தலி னாலே பிறக்கும் ஓசை பெரிதும் இனிதே என்றனர்; மகிழ்ந்தனர்; மழலையைக் கண்டனர் இதற்குப் பிறகுதான் பலதரங் கேட்டுப் பார்த்தாலும் சலிக்காச் சலதரங் கம்எனும் சங்கீதம் கண்டனர். கோடையும் வசந்தமும் O 65