பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருத்தெருவாய் ஒட்டுவார்கள்; கள்ளக் கணக்கைச் 'சரியாக்கிக் காட்டுவார். சுத்தமாய் வெள்ளை அடித்த சுவர்என்றால் மொத்தமாய்க் கைப்பற்ற முன்பதிவு செய்வார்.... முத்திரை செய்வார்.... மூர்க்கமாய் அங்கங்கே தொண்டர்களுக் கிடையே கைவரிசை கால்வரிசை போடா இதுஎங்கள் சுவர் என்று ஈரணிகள் சோடாபாட்டிலொடு தோன்றுவர்.... வீட்டுக்காரன் வெளியே வந்தாலும் வேடிக்கை பார்ப்பதன்றி என்சுவர் என்றுரைக்க முடியுமா? எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொடுத்தால் அவரால் வாங்கத்தான் முடியுமா? தாங்கத்தான் முடியுமா? ஒன்றேகால் அங்குலத்தில் ஒருவர் சுவர்வைக்கப் பார்த்தேன்.... பதறினேன். கோடையும் வசந்தமும் C 67