உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுஎன்ன நிலைக்குமா இருபதுநாள் நிற்குமா என்றேன் நான். அவர் சொன்னார்.... தேர்தல் அறிவிப்புச் செய்தி தெரியாதா? இன்னும் சிலமாதம் சென்று வாருங்கள் வந்து பாருங்கள் அப்போது ஆச்சரியப்படும்படியாய் அதிகனமாய் சுவர் இருக்கும் என்றார் பெருமையுடன். தேர்தல் முடிந்த சிலநாளில் ஆவலோடு போய்ப்பார்த்தேன்.... அதிசயம்.... கம்பன் காலத்துக் கன்னிப்பெண் இடைபோல் இருந்தசுவர் கர்ப்பவதி வயிறுபோல் கனத்திருக்கக் கண்டேன் கட்சித் தொண்டர்கள் கணக்கின்றி இரவெல்லாம் ஒன்றுக்கு மேல்ஒன்றாய் ஒட்டிய சுவரொட்டிகள் உண்டான பெண்ணாக உருமாற்றி விட்ட உண்மையினைக் கண்டு கொண்டேன் 68 O u8gtr