உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வாரத்துக்குப் பின்னர் ஊர் வந்தால் 'சீமைப் பயணம் சென்று திரும்பிய வித்தகரே வருக வென்று விளம்பரச் சுவரொட்டி! இனிமேல்சுவரொட்டி இல்லாமல் சுவைக்காது எதுவுமிங்கே! கடைக்குப் போய்வந்த காய்கறி வாங்கிவந்த கர்ம வீரனே வருக! பற்றுத் தேய்த்துப் படிப்படியாய சமையல்காரியாய்ப் பதவி உயர்வுபெற்ற பங்கஜமே வருக! கீர்த்தி மிகுந்த கேம்பிரிட்ஜ் பள்ளியிலே எல்.கே.ஜி. வகுப்பிலே இனிதாகச் சேரவந்த இளந்தளிரே வருக இப்படி சுவரொட்டி இல்லாமல் சுவைக்காது எதுவுமிங்கே! ‘மாலை முரசு’ பொங்கல் சிறப்பிதழ் 27. Hú.83 70 0 மீரா