உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னும் மணியும் பொழுதெல்லாம் குவித்திடுவார்...... அரிசியிலே அளவாய்க் கல்லைச் சேர்த்துவைத்து கலப்புமணம் செய்விப்பார் இரும்புப் பெட்டிக்கு இடுப்புவலி வரவைத்து கறுப்புப் பணத்தைக் கணக்கின்றிப் பெருக்கிடுவார். Ο இவரெல்லாம் உழைக்காமல் சுரண்டும் உன்மத்தர்..... இவரெல்லாம் மேல் வருணமாம்.... பாடுபடும் பாட்டாளி விவசாயி கீழ் வருணமாம்.... கேட்டால் மனம் கொதிக்கும். Ο உண்மையில் அவன்தான் காடுகொன்று நாடாக்கும் காவலன் ஆனால் அவன் வாழ்வில் முட் காடு வளர்கிறது. குருதி கசிகிறது. மற்றவர்க்கு மணிகளை அள்ளித் தருகின்ற அவன் வாழ்க்கை பதராய் உதிர்கிறது; பாழாய்த் தெரிகிறது. இனிக்கும் கரும்பை கொடுக்கின்றான், அவன் வாழ்க்கை வேம்பாய்க் கசக்கிறது.... வேதனையில் துடிக்கிறது. 74 0 மீரா