பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரோட்டும் ஏழை நளன் ஏமாற்றப்படுவதோ சபிக்கப்படுவதோ? Ö இனிமேல் இல்லை கவலை இதோ புரட்சிச் சட்டங்கள் என்கிறார்கள். ஏழை உழவனே! உனக்காகத் தான் எத்தனை சட்டங்கள்..... குறைந்த பட்சக் கூலிச் சட்டத்தை கோரினாய் உள்ள வேலையும் இல்லை உயிருக்கே மோசம் என்கிறான் பண்ணை முதலை. குடியிருப்பு மனைச் சட்டத்தை கொண்டு வா என்றாய் குடியிருக்கும் குடிசையை விட்டு எழுந்திரு என்கிறான் கோமான்! தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை வேண்டினாய் சேரியையே நெருப்பின் நீண்ட கரம் தீண்டும் என்கிறான் செல்வச் சீமான்! சட்டங்கள் எல்லாம் உனக்காக வா? நிலப்பிரபுத்துவத்தை நீசச் சித்திரத்தைப் 8 0 மீரா