இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நல்ல காலம் சாயுங் காலம் ...... மேற்கில் பரிதி மூத்துச் சாகுங்கா லம்.... தென்றல் பூம ணத்தை மேயுங்கா லம்; இளைஞன் நெஞ்சில் மோகம் மீறுங்கா லம்; உழைக்கும் கைகள் கொஞ்சம் ஒயுங் காலம்; பறவை கூட்டை நோக்கி ஒடுங்கா லம்; காதல் இருவர் தோள்மேல் சாயுங்காலம்; இதழ்கள் நாடும் இன்பச் சல்லாபக் காலம்! நல் லாபக் காலம்! கோடையும் வசந்தமும் O 83