மீராவின் கவித்துவச் சாதனைக்கு மற்றோர் அடையாளமாய் அமைந்தது, கனவுகள் கற்பனைகள் = காகிதங்கள். விசால அன்பால் விழுங்கு லோகத்தை என்று சொன்ன கவியரசனின் வார்த்தைகள் கண்ட வாழ்க்கை மீராவினுடையது. அந்த அன்பென்னும் கொடி மரத்தில் பட்டொளி வீசிப் பறந்த பதாகைதான் கனவுகள்: கற்பனைகள்' நூல். இளைய தலைமுறையின் காதல் பைபிளாக நெடுங்காலம் அரசோச்சிய இந்நூல் இன்னும் புதிய பதிப்புகளைக் கண்டு வருகிறது. புத்தகச் சந்தையில் இன்று மலைமலையாய்க் குவியும் காதல் கவிதைகளின் "ஒரிஜினல் இந்தச் சின்னக் காதல் மாயமோதிரத்தில் தான் பதுங்கிக் கிடக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பற்றிக் கொள்ளும் பரிசுத்தமான காதல் நெருப்பு எத்தனை மாசற்ற புனிதங்களைப் பூக்க வைக்கிறது என்பதை மீராவின் வரிகளில் தரிசிக்கிறோம். ‘Love's philosophy ’ arsip Gla; cò65] lustiņu stīgi ciò தத்துவம் போல ஒர் ஆன்ம விகசிப்பை மீராவின் இந்நூல் புலப்படுத்தும். என் வேட்கையே...... நீ எனக்குக் காதலைத் தந்தாய் அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயாவானது நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன் இது, ஏழையின் கண்ணீரைப் போல் உண்மையானதா என்று பார்" என்று முகப்பில் உயிர்ப்புடன் தொடங்கும் கவிதைகள் விதைப் பண்ணையாகவும், நாற்றங்காலாகவும், நந்தவன மாகவும், முடிவில் கைப்பிடி இதயத்தின் காலதீதச் சோகமாகவும் உருமாறிக் கொண்டே போவதைப் படித்த பின்னர் வெற்றுப் புலம்பல்களைக் காதல் கவிதை என ஒரு போதும் மதிக்க முடியவில்லை.
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/9
Appearance