உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் பவள அலகை நீட்டு பொய்ம்மையிலிருந்து உண்மையைப் பிரித்துக் காட்டு. கரிக்கும் உப்பு நீரை ஒதுக்கி இனிக்கும் அமிர்தப் பாலை மானிட சாதிக்குப் புகட்டு. நேற்று முட்டைக்குள் உயிர் ஒடுங்கியிருந்த நீ இன்று உன் செம்பட்டைச் சிறகை விரித்து எங்கள் நயன விளிம்பில் நர்த்தனம் செய்கிறாய். நாளை ஒரு தேவதை போல் எங்கள் கனவுகளில் நிறைந்து நிற்பாய். 'அன்னம் விடுதூது’ தனிச்சுற்றுக்காகத் தொடங்கப்பட்டமுதல் இதழில் வந்த முகப்புக் கவிதை 90 0 மீரா