பூகப்பாண்டியன் தேவி 75 விரிந்து அன்பொழுகும் பண்புடன் மைதீட்டப் பெற்ற மலர் விழியுடையாள் இத் தேவி என்று இயம்பிய ஒரு கருத்தாலே அவரது கவினே நன்கு விளக்கின்ை. இருவரின் அரிய இல்லறம் 'கற்ருரைக் கற்ருரே காமுறுவர்' என்னும் தமிழ் மூதாட்டியாரின் அமுதமொழிக்கு அரிய எடுத்துக் காட்டாகப் புலமையாளர் இருவர் கணவனும் மனேவியு மாய்ப் பொருந்துதல் அருமையினும் அருமையாகும். கலோலம் வாய்ந்த காவலகிைய பூதப்பாண்டியனும் கற்புநலம் கனிந்த பொற்புடையாராகிய பெருங்கோப் பெண்டும் ஒருவரையொருவர் பிரியாது இனிய இல் லறத்தை நன்கு கடாத்தி வந்தனர். மணியும் ஒளியும் போல் இணைபிரியாது மருவி வாழும் இவர்களது அரிய வாழ்வைக் கண்டு கூற்றுவனும் பொருமை கொண் டான். பாண்டியனுடன் மீண்டும் போர் பூதப் பாண்டியனுக்குத் தோற்று ஒல்லையூர் நாட்டை இழந்த சோழன் சில்லாண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் ஒல்லேயூரைக் கைப்பற்றக் கருதி ன்ை. பாண்டியனைப் போரில் எதிர்க்கச் சேரனது துணையை வேண்டினன். சோழனும் சேரனும் தத்தம் படையொடு திரண்டு வந்து ஒல்லையூர் காட்டு எல்லை யில் போர் முரசு முழக்கினர். முன்பு ஒல்லையூரை மீட்டுப் புகழை காட்டிய பூதப்பாண்டியன் அப்போர் முரசின் ஒலி கேட்டுப் பொங்கி எழுந்தான். தன் னுடைய கால்வகைப் படைகளையும் கல்லணி வகுத்து நிற்குமாறு பணித்தான். தன் படைவீரர்கட்கு எழுச்சி
பக்கம்:கோப்பெருந்தேவியர்.pdf/82
தோற்றம்