பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

4. கலையின் சமாதி

கோயில்கள் கலைக்கூடங்கள் என்று சொல்கிறார்கள், 'ஆகா, என்ன அற்புத வேலை ! என்ன திறமை என வியக்கிறார்கள், சிலைகளைப் பார்த்துவிட்டு.

ஆனால், அது என்றோ நாள் எதாவது எழுதி, போட்டோ போட்டு, புகழ்பெற விரும்பி கையில் காமிராவுடன் திரிகிற கலாரசிகன் எட்டிப் பார்க்கிறபொது!

மற்ற நாட்களில்? கர்ப்பக்கிருக இருளிலே காரிருளுடன் ஐக்யமாகிக் கிடக்கும் சிலை. அதைச் செய்த சிற்பி மகத்தான கலைஞனாக இருக்கலாம். அவனத உன்னது சிருஷ்டியாக இருக்கலாம் அது. ஆனால், என்று அது மூட பக்திக்கு நிலைக்களனானதோ அன்றே கலையொளி சமாதி செய்யப்பட்டு விட்டது என்று தான் அர்த்தம்.

மறுமலர்ச்சி இலக்கியத்தின் தலை சிறந்த கதாசிரியர் புதுமைப்பித்தன் எழுதியுள்ள சிறந்த கதைகளில் ஒன்று, இதே தத்துவத்தைத் தான் வெளியிகிறது.

கல்லிலே ஓர் கவிதை சமைத்தான் ஒரு சிற்பி. 'குனித்த புருவமும். கொவ்வைச் செவ்வாயும், குயின் சிரிப்பும், இனித்தங்கசிய எடுத்த பொற்பாதமும்' கொண்டு திகழ்ந்த அத்புத சிருஷ்டி. அதை கோயிலில் வைக்கப் போகிறார்கள் எனக் கேள்வியுற்ற ரசிகன் சொன்னான்; 'இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு அரசனின் அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு. இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தா