பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

களுக்கு இடம் எது? அப்படியிருக்கும் போது ஆலயங்கள் பக்தியின் நிலைக்களன் எனக் கூறப்படுவது அர்த்த மற்றது இல்லையா?

இவற்றை ஆராய்ந்தால் என்ன தெரிகிறது? சிறுவர்களாக இருக்கும்போது ஓட்டு வில்லையையும், கல்லையும் வைத்து சாமி விளையாட்டு நடத்தும் பண்பு, வயதுக்கு கற்பனை வளர்ச்சியுடன் முதிர்ச்சி பெற்றிருக்கிறது. ஆகவே பக்தி என்ற போர்வையில் பெரியமனிதர்கள் விளையாடும் பொழுதுபோக்கு ஆட்டம் தான் கோவில், சாமி, திருவிழா வகையராக்கன்.

அதுமட்டுமல்ல, ஆடம்பரமான, ஏராளமான பொருளுக்கு உலைவைக்கிற அர்த்தமற்ற விளையாட்டு!

சாதாரணமாக குழந்தைகள் சாமிவைத்து விளையாடும் பொழுது 'அரைக்கழுதை வயசாகியும் சாமி விளையாட்டா?' என்று சீறுகிற சமூகம், முழுக்கழுதை ஒண்ணரைக் கமுதைகள் வயசாகியும் கூட சாமி விளையாட்டு விளையாடும் பெரிய மனிதர்கள் நிறைந்ததாகவே இருக்கிறது!

திருவிழாக் காலங்களில் எவ்வளவு கால, பொருள், உழைப்பு பாழாகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எவ்வளவு பால், இளநீர், பழம் முதலிய உணவுப்பொருள்கள் வீணாகின்றன என்பதைச் சிந்தியுங்கள் நவராத்திரி காலத்திலும், மற்றும் விசேஷ காலங்களிலும் அழகுக்கொலு என ஆடம்பரம் செய்து பணம் பறிப்பது எத்தகைய விளையாட்டு என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

இவை இன்னும் நீடிக்கலாமா? அறிவு வளர்ச்சி பெற் பேரும் இன்று இவை அறியாமையின் சின்னங்களாக பிறரின் நகைப்புக்கு இலக்காக, விளங்குகின்றனவே. அது மனதில் தைக்கவில்லையா?