பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இடங்களிலே, அதை இரு கை ஏந்தி பவ்வியகமாப் பெற்று கண்ணிலும் தலையிலும் தெளித்துக்கொள்வதுடன் பருகவும் செய்கிறார்கள் பக்த சிகாமணிகள் ! இந்தத் தீர்த்த விநியோகப் பாபத்தைப் போக்கடிக்காவிட்டாலும், வியாதிகளை ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே பெரும் புண்ணியம் தான்!

இந்து அபிஷேக நீர் அதற்கென அமைந்த தொட்டியில் தேங்கிக் கடந்து காடியாய்ப் புளித்து சாக்கடயாய் நாறுவது உண்டு. அந்த நாற்ற அலைகள் தூரத்தில் வருவோரின் நாசியைப் பதம் பார்க்கும். பக்திப் பெருக்கால் கண்மூடித்தனமாக அந்த நீரைத் தொட்டு கண்களில் அப்பியும் தலையில் சிதறியும் புண்ணியம் சம்பாதிக்கும் ஜந்துக்களைப் பற்றி என்னதான் சொல்வது?

இந்தத் தீர்த்தத்துக்கு 'அண்ணன்' தான் கோயில்களில் விநியோகிக்கப்படும் சந்தனம். அது சந்தனமா? கோலப் பொடியைப் போட்டு கட்டையுடன் அரைத்தெடுத்த ஒரு பதார்த்தம், அதில் வாசமும் இராது. ஒரு எழவுமிராது! ஆனால், அதை பய பக்தியோடு வாங்கி தேகத்தில் வெள்ளையடித்துக் கொள்ள வேண்டுமாம்! அப்படிச் செய்யாதவர்கள் பரிகாசத்துக்கு உள்ளாகிறார்கள்.

இன்னமொரு வழக்கம் இருக்கிறதே - பட்டுக் கட்டி மாலை போட்டு, கிரீடம் கவிப்பது! திருவருட்பிரசாதம் கிடைக்குமோ கிடைக்காதோ, அது வேறு விஷயம்! அந்தப்பட்டு இருக்கிறதே அடடா! எத்தனை யுக காலமாக எவ்வளவு பேர் தலைகளில் சுற்றப்பட்டு அழுக்கேறிக்கிடக்கிறது என்பது அந்த எம்பெருமானுக்கு கூட தெரியாது! இது பரிசுத்தத்தின் சின்னமா!