பக்கம்:கோயில் மணி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலக் குழப்பம்

95

திருவள்ளுவர்: ஏன், அப்படியே அமரலாமே!

வல்லி: தங்களுக்கு முன் நான் அமரலாமா? இப்படியே நிற்கிறேன்.

திருவள்ளுவர்: கம்பநாடனுக்கு முன் அமர்கிறது இல்லையோ?

கம்பர்: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இவள் என்னைச் சிலசமயங்களில் வெருட்டுவதைப் பார்த்திருந்தால் இவளுடைய வீரம் தங்களுக்குத் தெரியும்!

திருவள்ளுவர்: பெண்மையில் ஆண்மை போலும்!

கம்பர்: என்ன, தங்கள் திருமேனி இளைத்துப் போயிருக்கிறதே!

திருவள்ளுவர்: இளைப்பதா? எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். நான் தொழிலாளிதானே? என் விருப்பப்படி உடம்பு கேட்கவேண்டுமானல் இவ்வாறு இருப்பதுதான் சரி. அது கிடக்கட்டும். நீ சுகமாக இருக்கிறாயா? உன்னுடைய இராமாயணத்தினுல் உலகமே இன்பத்தை அடைகிறது. பலரும் புகழ்கிறார்கள். புகழோடு பொருளும் இருக்கிறதல்லவா? வீடு, வாசல், தோப்பு, துரவு எல்லாம் இருக்கின்றனவா?

கம்பர்: எனக்கு எதற்கு அவை எல்லாம்? அழகான வீடு ஒன்றைச் சடையப்ப வள்ளல் கட்டித் தந்திருக்கிறார், மற்றப்படி எனக்குவேண்டிய எல்லாவற்றையும் அவர் தருகிறார். எனக்கு என்ன குறை? அந்தக் கற்பகம் இருக்கும்போது எனக்குக் கிடைக்காத பொருளே இல்லை.

திருவள்ளுவர்: இந்தப் பொன்னடை எந்த மன்னர் தந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/101&oldid=1384070" இலிருந்து மீள்விக்கப்பட்டது