பக்கம்:கோயில் மணி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கோயில் மணி

கம்பர்: மன்னரா? எந்த மன்னரிடமும் நான் போவதில்லை. எனக்கு மன்னரும், மன்னர்களுக்கெல்லாம் மன்னரும், ஏன், தெய்வமும் கூடச் சடையப்ப வள்ளல்தாம். அவர் அளித்த பரிசுகளில் இது ஒன்று.

வல்லி: (கம்பரைப் பார்த்து) அன்னையைத் தரிசித்துக் கொள்ள வேண்டாமா?

[திருவள்ளுவர் எங்கோ பார்க்கிறார்.]

கம்பர்: (வல்லியிடம்) அவசியம் தரிசித்துக் கொள்ள வேண்டியதுதான். (திருவள்ளுவரை நோக்கி) எங்கள் எஞ்சிய விருப்பத்தையும் நிறைவேற்றி யருள வேண்டும்.)

திருவள்ளுவர்: (கனைக்கிறார்) வந்து...வாசுகியைத்தானே பார்க்கவேண்டும்? (தடுமாறுகிறார்.) அவளே இவ்வளவு நேரம் வந்திருப்பாள். ஆனால்...ஆனால்...

கம்பர்: (பரபரப்புடன்) என்ன சொல்கிறீர்கள்? அம்மா இங்கே இல்லையா?

திருவள்ளுவர்: இருக்கிறாள்; இப்போது எங்கேயாவது போயிருப்பாள். அவசியம் பார்க்கவேண்டுமா?

கம்பர்: ஆம்; அவர்களைப் பார்க்காவிட்டால் கோயிலுக்குச் சென்று இறைவளை மட்டும் தரிசித்து வந்தது போல ஆகாதா?

திருவள்ளுவர்: அப்படியும் சில சமயங்களில் செய்ய வேண்டியதுதான். கணவன் மனைவியாக யார் வந்தாலும் குறிப்பு அறிந்து வந்து உபசாரம் செய்கிறவள் அவள். ஏனோ வரவில்லையே!

கம்பர்: (சிறிது யோசனையில் ஆழ்கிறார்) ஒரு கால்....

திருவள்ளுவர்: ஒருகால் ....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/102&oldid=1384071" இலிருந்து மீள்விக்கப்பட்டது