பக்கம்:கோயில் மணி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கோயில் மணி

னம் என்று சொல்லிக் கொடு, போய் வா, பராசக்தி உன்னைக் காப்பாற்றட்டும். (போய்விடுகிறார்.)

ஒட்டக்கூத்தர்: (கையிலிருந்து அது கீழே நழுவுகிறது.) இந்தப் பைத்தியம் யார்? (வெறிக்க வெறிக்கப் பார்க்கிறார்.)

காட்சி—4

நிலமகள்: இது என்ன கலவை? ஒன்றுக் ஒன்று பொருத்தம் இல்லாமல் சீட்டுக்கள் விழுந்திருக்கின்றனவே!

பிரமதேவன்: உன் விருப்பப்படியே எல்லாம் அடைவாய் விழுமாக்கும்!

நிலமகள்: பின்னே இது என்ன? ஒரே அலங்கோலம்! ஒரே குழப்பம்! எதை எதோடு சேர்க்கவேண்டுமோ, அது அது இங்கே காணோம். ஜோடியே சேரமாட்டேன் என்கிறது.

பிரமதேவன்: சீட்டாட்டம் என்றால் பின்னே எப்படி இருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/106&oldid=1384088" இலிருந்து மீள்விக்கப்பட்டது