பக்கம்:கோயில் மணி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

ர்வத குமாரி என்று அவளுக்கு அவள் தந்தை பெயர் வைத்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதெல்லாம் அதைத்தான் அவள் வைத்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அவள் பர்வதந்தான். அம்மா, அப்பா இருவரும் பர்வதம் என்றே அழைத்தார்கள். அவள் கல்லூரிக்கு வந்தாள். பர்வத குமாரி என்பது நீண்ட பெயராகத் தோன்றியது. அதைச் சுருக்கிக் குமாரி என்றே வைத்துக் கொண்டாள். இப்படியாக அவள் பெயரை இரண்டாக விண்டு வீட்டில் பர்வதமென்றும், கல்லூரியில் குமாரி என்றும் அழைக்கலானார்கள்.

அவள் படிப்பிலே அவள் தந்தை அதிகக் கவனமாக இருந்தார். மலையத்துவச பாண்டியன் மீனாட்சியை ஆண் குழந்தையைப் போலவே வளர்த்துப் படிப்பும் சொல்லிக் கொடுத்து ஆனையேற்றம், குதிரையேற்றம் எல்லாம் பழக்கி வைத்தானாம். குமாரியும் அப்படித்தான் வளர்த்தாள். அருணாசல வாத்தியாருக்கும் அவள் ஒருத்திதான் குழந்தை. அவர் சின்னப் பள்ளிக்கூடத்து வாத்தியாரானாலும் கையைக் கட்டி, வாயைக் கட்டி, ‘டியூஷன்’ சொல்லிக் கொடுத்து வந்த பணத்தைக் கொண்டு தம் மகளைப் படிக்க வைத்தார். அவள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்தார். கல்லூரியில், “நான் பி. எஸ்சி. யில் தான் சேருவேன்” என்று பிடிவாதம் பிடித்தாள். தடை சொல்லாமல் அதில் அவளைச் சேர்த்தார். ‘பொறியியல் கல்லூரியில் சேருவேன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/107&oldid=1384090" இலிருந்து மீள்விக்கப்பட்டது