பக்கம்:கோயில் மணி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

கோயில் மணி

என்று சொல்லியிருந்தாலும் எந்த மந்திரி காலிலாவது விழுந்து அதில் சேர்த்திருப்பார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு தூரத்துக்குத் துணிவு உண்டாகவில்லை.

அவள் சுறுசுறுப்பாகப் படித்தாள். “உங்கள் மகள் டாக்டராகப் போகிறாளாமே!” என்று யாரோ அவள் தந்தையைக் கேட்டார். அதற்கு ஊர்ப்பட்ட பணம் செலவாகுமென்று அவருக்குத் தெரியும். பெண்களுக்கு ஏற்ற வேலைதான் அது. ஆனால் பணத்துக்கு எங்கே போவது? இப்படி முதலில் மலைத்தாலும், முடிந்தால் எப்படியாவது தம் பெண்ணை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுவதென்று உள்ளூற எண்ணிக் கொண்டிருந்தார். நாம் நினைக்கிறபடியெல்லாம் நடக்குமா? குமாரி—அவருக்குப் பர்வதம்—கல்லூரியில் பி. எஸ்ஸி. படித்து முடிப்பதற்கும் அவருக்குப் பாரிச வாயு வருவதற்கும் நாள் பார்த்து வைத்தது போலப் பொருத்தம் அமைந்தது. இனிமேல் அந்த மூன்று பேருக்கும் சாப்பாட்டுக்கு முதலில் வழிபண்ண வேண்டுமே! கடைசியில் குமாரியே ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். பல்லைக் கடித்துக்கொண்டு இன்னும் ஓர் ஆண்டு ஆசிரியப் பயிற்சி பெற்று, பி. டி. பட்டத்தையும் கையில் வாங்கிக்கொண்டு எங்காவது ஆசிரியையாகப் புகுவது என்று உறுதி செய்தாள். அவள் தந்தையார் வேலை செய்து வந்த பள்ளிக்கூடத்தில் அவருக்கு மொத்தமாக ஒரு தொகை வழங்கினார்கள். அதை வைத்துக்கொண்டு பயிற்சிக் காலத்தைத் தள்ளி விடலாம்.

இதெல்லாம் பழைய கதை. இப்போது குமாரி ஊரில் மிகவும் பெயர் பெற்ற உயர்நிலைப் பள்ளித்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/108&oldid=1384091" இலிருந்து மீள்விக்கப்பட்டது