பக்கம்:கோயில் மணி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

“”ன்ன அம்மா,நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்?” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்; யாரோ பூக்காரி பேசினாள். அவளை உற்றுப் பார்த்தேன்.

“என்ன அம்மா, என்னைத் தெரியவில்லையா? நான் தான் செங்கமலம் அம்மா!”

“அட நீயா! உன்னை எங்கே இத்தனை வருஷங்களாகக் காணவில்லை?”

அவள் செங்கமலமா? எப்படி இருந்தாள் எப்படி ஆகிவிட்டாள்! புத்தம் புது ரோஜாப் பூவைப் போல இருந்தாளே! ரோஜாப் பூவைச் சொல்லக்கூடாது; அது தொட்டால் உதிரும். அழகான செந்தாமரையைப் போலத் தள தளவென்று இருந்தாள். அவள் முகத்தில் முல்லை பூத்திருக்கும். கன்னத்தில் மாம்பழம் பழுத்திருக்கும். அவளா இப்படி ஆகிவிட்டாள்?

“ஏண்டி, உனக்கு உடம்புக்கு என்ன? இப்படி வாடின வெற்றிலை ஆகிவிட்டாயே! நாராயணன் செளக்கியமா?” என்று கேட்டேன்.

செளக்கியந்தான் அம்மா. என் உடம்புக்கு ஒரு கேடும் இல்லை; வயசு ஆகிறதில்லையா?

“என்னடி இது? நூற்றுக் கிழவி மாதிரி பேசுகிறாயே. நேற்று உனக்குக் கல்யாணமானது எனக்குத் தெரியும். உன்னைப் பார்த்து அஞ்சு வருஷம் இருக்குமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/123&oldid=1384126" இலிருந்து மீள்விக்கப்பட்டது