பக்கம்:கோயில் மணி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

125

செங்கமலம் இந்தச் செடிகளைப் பார்த்துக் கொஞ்சம் வியப்பை அடைந்தாள் என்றுதான் தோன்றுகிறது. அதோடு அவளுக்கு ஏமாற்றமும் உண்டாயிற்று.

“நான் இப்போதெல்லாம் ரோஜாப்பூவும் செவ்வந்திப்பூவுந்தான் வெள்ளிக்கிழமைகளில் வெளியில் வாங்குகிறேன். நீயே இனிமேல் கொண்டுவந்து கொடு. அது சரி; நான் நாராயணனைப் பார்க்கவேண்டுமே!” என்றேன்.

“வரச்சொல்லுகிறேன், அம்மா.”

அந்த வெள்ளிக்கிழமை அவள் ரோஜாப்பூக் கொண்டுவந்து தந்தாள். உடனே பணம் கொடுத்தால் நல்லது என்று. சொன்னாள். நான் கையில் நாலணாக் கொடுத்து அனுப்பினேன். நாராயணன் வரவில்லை.

ஒரு நாள் அவன் வந்தான். ஷவரம் செய்து கொண்டு எத்தனை நாளாயிற்றோ தெரியவில்லை. செங்கமலத்தைவிட அவன் இளைத்திருந்தான். இடையில் ஒரு கந்தல் துணி. “ஏண்டா இப்படி ஆகிவிட்டாய்?” என்று கேட்டேன்.

“என் தலைவிதி அம்மா. நான் கெட்டது போதாது என்று அவளையும் தொந்தரவு படுத்துகிறேன்” என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினான்.

“என்ன சமாசாரம்?”

“என் மாமனை நம்பிப் போய்த் தரித்திரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டேன். கூலிவேலை கிடைக்கிறதில்லை. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை. செங்கமலம் ஓடியாடி நாலு காசு கொண்டுவந்தால் கஞ்சி கிடைக்கிறது. எனக்கு ஏண்டா உயிரோடு இருக்கிறோம் என்று ஆகிவிட்டது. அந்தப் பெண்பிள்ளை கண் கசங்குமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/129&oldid=1384148" இலிருந்து மீள்விக்கப்பட்டது