பக்கம்:கோயில் மணி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

கோயில் மணி

இருக்கிறது, அம்மா. பிச்சை வாங்க உள்ளத்தில் வலுவில்லை. எங்கேயாவது கம்பெனிகளில் காவல்காரன் வேலை கிடைத்தால் உங்கள் வீட்டு ஐயாவிடம் சொல்லி வாங்கித் தரச் சொல்லுங்கள். எனக்கு உயிரையே கொடுப்பதாகும்” என்று சொல்லிக் கண்ணேத் துடைத்துக் கொண்டே அவன் போய்விட்டான்.

நான் வைத்த ரோஜாச் செடியைப் போலல்லவா அவன் ஆகிவிட்டான்? எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. இவரிடம் அவன் வறுமை நிலையைச் சொல்லி ஏதாவது வேலை வாங்கித் தரும்படி சொன்னேன்.

“இப்போதெல்லாம் கண்டவர்களை வேலைக்கு வைத்து கொள்ளமாட்டார்கள். யோக்கியர்கள் கிடைப்பது அருமை. அப்படிக் கிடைத்து வேலை கொடுத்தால் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு வேலை நிறுத்தம், அது, இது என்று தொல்லை கொடுக்கத் தொடங்குகிறார்கள் ” என்று சொல்லிவிட்டார். -

அந்த வெள்ளிக்கிழமை செங்கமலம் வந்தாள். அவளிடம், “ஏண்டி, நாராயணனை இங்கே வந்து இந்தச் செடிகளுக்குத் தண்ணீர் விடச் சொல்லேன்” என்றேன்.

வேறு யாரோ தோட்டவேலை செய்கிறார்களே: அவர்களை மாற்றினால் சண்டைபிடிக்க மாட்டார்களா? என்று கேட்டாள்.

“அவன் தோட்ட வேலைக்காரன் அல்ல; எங்கள் கம்பெனியிலே வேலை செய்கிறவன். அவன் சரியாகவே வருகிறதில்லை. அவனுக்குக் கொடுக்கிறதை நாராயணனுக்குக் கொடுக்கிறேன். ஒழிந்தபோது வந்து கவனித்துக்கொள்ளட்டுமே!” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/132&oldid=1384198" இலிருந்து மீள்விக்கப்பட்டது