பக்கம்:கோயில் மணி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

127

“ஒழிந்தபோது என்ன அம்மா? எப்போதும் ஒழிவு தான்!”

நாராயணன் வந்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். அவனுக்கு அதே ஐந்து ரூபாயைக் கொடுக்க மனம் வரவில்லை. பத்து ரூபாயாகக் கொடுத்தேன். அதற்கே இவர் மிகவும் கோபித்துக்கொண்டார். “வண்டி வண்டியாகப் புழுதி மண்ணை எருவென்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கிப் போட்டாய். எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் விலைக்குச் செடி வாங்கி வந்தாய். பூச்சட்டிகள் மூலைக்கு ஒன்றாகக் கிடக்கின்றன. அவையெல்லாம் அடிக்கடி உண்டாகும் செலவு அல்ல, போகட்டும் என்று சும்மா இருந்தேன். இப்போது என்னவென்றால், நிரந்தரச் செலவை நூறு சதவிகிதம் உயர்த்திவிட்டாய் ” என்று வியாபார தோரணையில் கடிந்து கொண்டார்.

“பாவம்! ஓர் ஏழை பிழைத்துப் போகட்டும்” என்றேன்.

“நீ தோட்டம் போடுகிறாயா? அன்ன சத்திரம் கட்டுகிறாயா? மாசம் பத்து ரூபாயில் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்புகிறாயா!”

இவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி நாராயணனை வேலைக்கு வைத்துக்கொண்டேன். மாசம் பத்து ரூபாய் கொடுத்தேன். அப்படியும் அவனுக்கு விடியவில்லை. செங்கமலம் கருத்தரித்துக் குறையாகப் பிரசவித்து, ஆஸ்பத்திரியில் கிடந்தாள். இருபது ரூபாய் இவருக்குத் தெரியாமல் நாராயணனுக்குக் கடன் கொடுத்தேன். அவன் வறுமை விடியா இரவாகவே இருந்தது. எனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/133&oldid=1384202" இலிருந்து மீள்விக்கப்பட்டது