பக்கம்:கோயில் மணி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

கோயில் மணி

ஒரு ரோசனை சொல்றேன். அம்மாவிடம் சொல்றயா அம்மா?”

“என்ன அது?”

“இந்தக் கொளந்தையையும் எங்க வூட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறேன். சாக்கிரதையாப் பாத்துக்கறேன். இதுன் கண்ணைக் கசக்கினாலும் மனசு பொறுக்க மாட்டேங்குது. இருபத்து நாலு மணி நேரமும் இங்கேயே இருக்க முடியுமாம்மா?”

“அம்மாவைக் கேட்காமல் ஒன்றும் செய்யக்கூடாது. நீ கேட்டுப் பாரேன்.”

“எனக்குக் கேட்கப் பயமாய் இருக்குது. பேசறத்துக்கு அம்மாவுக்கு நேரம் ஏது? நீ பொறுமைசாலி. அவங்க மனசுபோலப் போறே. அதனாலே தான் உன் கிட்டச் சொல்றேன். கொளந்தைக்குச் சாப்பாடு போட்டுட்டுத் தூங்கவச்சிட்டுப் போறேன். நடுவிலே வந்து. பாத்து எளுந்திரிச்சுட்டா அளைச்சுக்கிட்டுப் போறேன். வண்டி, பொம்மை எல்லாம் கொண்டு போய் வெளையாட்டுக் காட்டறேன். என் மவ கொளந்தைங்களும் இருக்குது. கூட வெளையாடலாம்.”

“சொல்லிப் பார்க்கிறேன்” என்று தமயந்தி சொன்னாள்.

இதற்கு முதலில் நளினி ஒப்புக்கொள்ளவில்லை; “நாகரிகம் இல்லாத ஜனங்களோடு பழகவிடக்கூடாது” என்று மறுத்தாள். ஆனால் வள்ளி சத்தியாக்கிரகம் செய்வாள் போல இருந்தது: “என்னை அனுப்பிச்சுடுங்க அம்மா. ஒங்களுக்குத் தக்கின. ஆளைப் பாத்துக்குங்க” என்றாள்.

வள்ளிக்குக் கை சுத்தம், வாய் சுத்தம். இது நளினிக்கு நன்றாகத் தெரியும். அப்படி ஓர் ஆள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/144&oldid=1384221" இலிருந்து மீள்விக்கப்பட்டது