பக்கம்:கோயில் மணி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

கோயில் மணி

வளர்ப்பைப் பற்றிய புத்தகத்தில் முக்கியமான பகுதியை எழுதவேண்டுமென்று தீர்மானமாயிற்று. அதற்காக அவள் புத்தக சாலைகளை நாடிச் சென்று புத்தகங்களைக் கொண்டு வந்தாள். தமயந்தியைக் குறிப்புகளை எடுக்கச் சொல்லியிருந்தாள். பாவம் தானே அந்தப் பகுதியை எழுதி முடிக்க வேண்டியிருக்கும் என்பதைத் தமயந்தி நன்கு அறிவாள்.

ரு நாள் நளினிக்குச் சிறிது உடம்பு சரி இல்லை. அன்று வீட்டில் தங்கினாள். தமயந்தியைத் தன்னுடன் இருக்கும்படி சொன்னாள். அவள் படுத்திருந்த அறைக்கு வெளியே குழந்தை மோகன் விளையாடிக் கொண்டிருந்தான்.

“நளினி தமயந்தியிடம், நீ என்ன குறிப்புக்கள் எடுத்திருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள ஒட்டுறவைப் பற்றிப் புதியதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். உணவு, உடை, வசதி ஆகிய எல்லாவற்றையும் விட அன்புதான் இந்த உறவில் முக்கியம் என்று ஆசிரியர் எழுதியிருக்கிறார்.”

“சரி, சரி. நல்ல கருத்துக்களாகத் தொகுத்து வை, என்னுடைய கட்டுரை நல்ல பெயர் எடுக்கவேண்டும்; தெரிந்ததா?”

"புத்தகம் படிக்கப் படிக்கச் சுவையாக இருக்கிறது."

'என்ன அப்படிப் பிரமாதமான சுவை”

“ஆசிரியர் தம் அநுபவத்தில் கண்ட உதாரணங்கள் பலவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறார். குழந்தைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/146&oldid=1384224" இலிருந்து மீள்விக்கப்பட்டது