பக்கம்:கோயில் மணி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

கோயில் மணி

ஒரு காதில் குழந்தை மோகன் பேச்சு விழுந்தது. நடு நடுவே நளினியின் பேச்சும் விழுந்தது. “கொஞ்சம் இரு” என்று நளினியைக் கையமர்த்தி மோகன் பேச்சைக் கவனித்தாள். சிது நேரத்துக்குப் பிறகு, “வள்ளி!” என்று கூப்பிட்டாள்.

“இதோ வருகிறேன்” என்று அவள் வந்தாள்.

“மோகன் எங்கே?”

“அப்பா, மோகன், அம்மா கூப்பிட்ருங்க, பாரு.”

குழந்தை மெல்ல வந்தான். நளினி, “ராஜா, இங்கே வா” என்றாள்.

“மாத்தேன். நான் வெளையாடப் போகணும்” என்றான் குழந்தை.

“இங்கேயே விளையாடேன். பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடு. புதுப்பொம்மைகளை வாங்கிக்கொண்டு வருகிறேன்.”

“சங்கனோடதான் வெளையாடுவேன். பொம்மை பேசாது.”

அதற்குள் டெலிபோன் மணி அடித்தது, டாக்டர் பேசினர். தமயந்தி பதில் சொன்னாள்; “ஜூரம் இல்லை. வெறும் அசதிதான். சொல்லிப் பார்க்கிறேன். நமஸ்காரம்” என்று சொல்லிச் சிரித்தாள்; “உன்னை நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்கிறார். மருந்தே வேண்டாமாம். ஒய்வுதான் மருந்தாம்” என்றாள்.

அதற்குள் மற்றொரு முறை டெலிபோன் அலறியது. “ஹல்லோ! நளினியா?”

“நளினி வீடுதான்: நான் தமயந்தி.”

“நளினி இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/148&oldid=1384228" இலிருந்து மீள்விக்கப்பட்டது