பக்கம்:கோயில் மணி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றிக் கடன்

கூண்டில் நிற்கும் கைதி குனிந்தபடியே பதில் சொன்னன். மாஜிஸ்டிரேட் அவனைக் கேள்வி கேட்கும் போது வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே பேசினன். அவன் அழுகிறான் என்றும் தோன்றியது. “நான் திருடியது உண்மைதான். எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி.” இதைச் சொல்வதற்குள் அவன் குரல் தழுதழுத்தது.

“திருடுவது தவறு என்று தெரிந்திருந்தும் திருடலாமா?” என்று மாஜிஸ்டிரேட் கேட்டார்.

“தவறுதான்; தெரிந்திருந்தும் செய்தது பெரிய தவறு. தண்டனை கொடுங்கள்.” —இப்போது அவன் அழுதே விட்டான். அவன் தலையைக் குனிந்து கொண்டே பேசினன். அருகில் இருந்த போலீஸ்காரர், “தலை நிமிர்ந்து ஐயாவைப் பார்த்துப் பேசடா” என்று மிரட்டியும் நிமிரவில்லை.

சாட்சி விசாரணைகள் ஆனபிறகு குற்றவாளியை மறுபடியும் கூண்டில் நிறுத்தினார்கள். அவன் அழுதபடியே இருந்தான். கைதியின் பெயர் நாகராஜன். அவன் இன்னும் நிமிர்ந்து மாஜிஸ்டிரேட்டைப் பார்க்காமலே கூண்டில் நின்றான்.

“ஏன் அப்பா, நிமிர்ந்து பார்த்துப் பேசு” என்று மாஜிஸ்டிரேட் சொன்னர். அவன் நிமிரவில்லை. போலீஸ்காரர் கைதியின் பக்கத்தில் சென்று, “நிமிர்ந்து பேசு. இல்லாவிட்டால்...” என்று மிரட்டினவுடனே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/153&oldid=1384242" இலிருந்து மீள்விக்கப்பட்டது