பக்கம்:கோயில் மணி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றிக் கடன்

149

“அதட்டி மிரட்ட வில்லையே?”

“நீங்கள் சொல்லியிருக்கும்போது நான் அப்படிச் செய்வேன? ஏதோ சந்தர்ப்ப பேதத்தால் இந்தக் காரியம் செய்திருக்கிறான். தாங்கள் அவனுக்காக அபராதத்தைச் செலுத்தியபோதே அவன் இயல்பாகவே பொல்லாதவன் அல்ல என்பதைத் தெரிந்து கொண்டேன்.”

“இப்போது அவன் எங்கே இருக்கிறான்?”

“ஓட்டலில் ஓர் அறையில் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தேன். தாங்கள் பார்க்கவேண்டும் என்று சொன்னதாகவும், தாங்களே அவனுக்காக அபராதம் செலுத்திவிட்டதாகவும் சொன்னேன். அவன் கேட்டு முதலில் அழுதான். பிறகு அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.”

“சரி, சரி; நான் அங்கே வருகிறேன்” என்று மாஜிஸ்டிரேட் புறப்பட்டார்.

ஹோட்டலுக்குப் போனவுடன் ஹோட்டல்காரர் மரியாதையுடன் வரவேற்றார்.

“15-ஆம் நம்பர் அறைக்காரர் டிபன் சாப்பிட்டாரா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“அவர் சாப்பாடு சாப்பிட்டதோடு சரி. நீங்கள் இங்கிருந்து போன அரை மணியில் இங்கே வந்து சாவியைத் தந்தார். நான் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. இன்ஸ்பெக்டர் வந்தால் இந்தக் கடிதத்தை அவரிடம் கொடுங்கள் என்று சொல்லிப் போய்விட்டார்.”

கடிதத்தை வாங்கினார் இன்ஸ்பெக்டர். உறையின் மேல் இன்ஸ்பெக்டர் விலாசம் இருந்தது. அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/155&oldid=1384249" இலிருந்து மீள்விக்கப்பட்டது