பக்கம்:கோயில் மணி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றிக் கடன்

151

வேண்டும். பார்ப்பதற்கு வேண்டிய தகுதியையும் தைரியத்தையும் சேகரித்துக்கொண்டு என் தெய்வத்தை வந்து தரிசித்துக் கொள்வேன். — நாகராஜன்.”

கடிதத்தைப் படித்தார் மாஜிஸ்டிரேட் நடராஜன். அவர் கண்ணில் நீர் வழிந்தது; “வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்று தழுதழுத்த குரலில் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

“அந்த ஆள் தற்கொலை பண்ணிக்கொள்ளப் போவதாக எழுதியிருக்கிறானா? தாங்கள் கலங்குவதைக் கண்டு அப்படி ஊகிக்கிறேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.

மாஜிஸ்டிரேட் இப்போது கண்ணீர்த் தாரையையே புறப்படவிட்டார். பேச முடியவில்லை. கடிதத்தை இன்ஸ்பெக்டரிடமே கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அதைப் படித்துவிட்டு, “இவர் யார்?” என்று கேட்டார்.

தம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மாஜிஸ்டிரேட் பேசலானார்; “இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு நாகராஜனுடைய தகப்பனாரே காரணம். நானும் அவனும் இளமைத் தோழர்கள். நான் ஏழை. ஆனால் புத்திசாலியென்று அறிந்து என்னையும் அவனையும் சேர்ந்து படிக்கும்படி ஏற்பாடு செய்தார், அந்தப் பெரியவர். இரண்டு பேருக்கும் ஒரே உபசாரம். நான் அவர்கள் வீட்டிலே இருந்து படித்தேன். நாகராஜனுக்கு அப்போதே கெட்ட பழக்கம் உண்டாயிற்று. நான் கண்டிப்பேன். என்னிடம் மட்டும் அவனுக்கு அளவற்ற அன்பு. இரண்டு மூன்று வகுப்புகள் என்னோடு வந்தான். பத்தாம் வகுப்பில் அவன் மட்டம் போட்டுவிட்டான். அவன் தந்தையார் என்னைக் கல்லூரியில் சேர்த்தார். அவனுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கச் சொன்னார். எங்கள் நட்புறவு நீடித்தது. நான் இண்ட்டர் பரீட்சை முடித்தபோது பெரியவர் திடீரென்று இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/157&oldid=1384253" இலிருந்து மீள்விக்கப்பட்டது