பக்கம்:கோயில் மணி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கோயில் மணி

விட்டார். நான் காலேஜில் முதல்வனாக இருந்தமையால் உபகாரச் சம்பளம் பெற்று, பி. ஏ. படித்து முன்னுக்கு வந்தேன். நாகராஜன் பணத்தைத் தாம் தும் செய்கிறான் என்று கேள்விப்பட்டேன்.

“நான் வேலைக்காக அலைந்து கல்கத்தா போனேன். பம்பாய் போனேன். கடைசியில் சென்னைக்கே வந்தேன். நாகராஜன் இருக்கிற இடம் தெரியவில்லை. இப்போதுதான் பார்த்தேன். எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. குரல், தோற்றம் எல்லாம் நாகராஜன்போலவே இருந்தன. முகத்தைப் பார்க்கிறவரையில் நிச்சயப்படவில்லை. முகத்தைக் கண்டேன். எனக்கு நிலை கொள்ளவில்லை. நான் இந்த இருநூறு ரூபாய் செலுத்தியது எந்த மூலை? அவனை நல்வழிக்குத் திருப்புவதற்கு என்னுடனே சில காலம் வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். ஆண்டவனுக்கு அது சம்மதம் இல்லை. என் நன்றிக்கடனைச் சரியாகத் தீர்க்க முடியவில்லை!”

கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், "அவர் திருந்தி விடுவார் என்று தோன்றுகிறது. அவரும் நன்றிக் கடனைத் தீர்த்துக்கொள்ளும் உணர்ச்சியுடன் இருக்கிறார்” என்று தம் கருத்தைச் சொன்னர்.

"பார்க்கலாம். அந்தக் கடிதத்தில் அவன் எழுதியிருப்பதுபோல, அவன் திருந்த வேண்டுமென்று இறைவனை மன்றாடிப் பார்க்கிறேன்” என்று மாஜிஸ்டிரேட் ஒரு பெருமூச்சு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/158&oldid=1384256" இலிருந்து மீள்விக்கப்பட்டது