பக்கம்:கோயில் மணி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கோயில் மணி

மூடிக்கொண்டிருக்கும்போது இப்படித் தோன்றும். கண்ணனைப் பற்றித் தன் அம்மாவிடம் அவன் எத்தனையோ கேள்விகளைக் கேட்டிருக்கிறான். அவள் பலவற்றிற்கு விடை சொன்னாலும் சிலவற்றிற்கு விடை சொல்ல முடியாமல் திகைப்பாள். கண்ணனுடைய தோற்றத்தை, அழகை, செயலை, எல்லாவற்றையும் கேட்பான்.

“ஏன், அம்மா, கண்ணன் கறுப்பு என்று சொன்னாயே; அங்கே ஒரு பையன் மாடு மேய்க்கிறான்; கறுப்பாய்க் குண்டு மூஞ்சியாய் இருக்கிறான்; கண்ணன் அவன் மாதிரிதானே இருப்பான்?”

“போடா பைத்தியம்! மாடு மேய்க்கிற பையன் எங்கே, கண்ணன் எங்கே? கண்ணன் சாமி அல்லவா?”

“நீதான் கண்ணனும் மாடு மேய்க்கிறவன் என்று சொன்னாயே;”

“மாடு மேய்த்தாலும் அவன் பெரியவன்.”

“ஏன்?”

இந்தக் கேள்விக்குத் தாயால் பதில் சொல்ல முடியவில்லை; “வெறுமனே தொணதொணவென்று கேள்வி கேட்காதே; போய் விளையாடு” என்று சொல்வி, ஏதோ காரியத்தைக் கவனிக்கப் போய்விடுவாள் அவள். பெரியாழ்வார் திருமொழியைக் காலை நேரத்தில் கண்ணன் படத்துக்குமுன் பாராயணம் செய்கிறவள் அவள்; பஜனைக் கூடத்தில்தான்.

கல்யாண நகருக்கு அருகில் இரண்டு சேரிகள். அந்தச் சேரிகளில் உள்ளவர்கள் உற்சவ காலத்தில் அன்னம் பாலிப்பு நடக்கும்போது இங்கே வந்து உணபார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/18&oldid=1382759" இலிருந்து மீள்விக்கப்பட்டது