பக்கம்:கோயில் மணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கோயில் மணி

“யாரோ கண்ணனாம்; குண்டு மூஞ்சியாம்; சிரிப்பானாம்; அவனைத் தேடிக்கொண்டு போனானாம். நேற்றுப் பாகவதர் சொன்னாரே, அப்படி அல்லவா இவன் வருணிக்கிறான்?”

“ஆமாம்! யாரோ ஒரு கழிசடை அந்தச் சேரியிவிருந்து வருகிறான் போலிருக்கிறது. அவன் இவனுக்கு எதையோ கொடுத்து மயக்கியிருக்கிறான். அவனுக்கு இவன் வடை கொடுக்கப் போனானாம்!”

அவள் மறுபடியும் ஆத்திரம் கொள்வதைக் கண்டு நாராயணன் பேச்சை நிறுத்திக் கொண்டார். மெல்லக் குழந்தையைத் தூங்கவைத்து விட்டுக் கீழே போனார்.

“அம்புஜம்!” என்று அழைத்தார்.

“ஏன்?”

“குழந்தைக்கு முன் என்ன சொல்வதென்று உனக்குத் தெரியவில்லையே! அவன் அரண்டுபோய்க் கிடக்கிறான். நீ என்னடா என்றால் மறுபடியும் மறுபடியும் பத்திரகாளியைப்போல் நிற்கிறாயே!”

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இன்றைக்குக் குழந்தை உயிருடன் வந்து சேர வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்தது எனக்கல்லவா தெரியும்?”

“அதற்காக வீடு திரும்பிய குழந்தையை மிரட்டித் துன்புறுத்த வேண்டுமா?”

“அவனை எங்கே நான் மிரட்டினேன்? இவன் தேடிக்கொண்டு ஓடினானே, அவனையல்லவா சொன்னேன்?”

“அட, அடிமுட்டாளே! குழந்தைக்கு முன்னாலே யாரையோ சொன்னேன் என்றால், அவன் விவரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/24&oldid=1382766" இலிருந்து மீள்விக்கப்பட்டது