பக்கம்:கோயில் மணி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாடு மேய்க்கும் கண்ணன்

19

புரிந்துகொள்வானா? இப்போது என்னிடம் சொல், நான் புரிந்துகொள்ள முயலுகிறேன்.”

“சொல்கிறேன், சுரைக்காய்க்கு உப்பில்லையென்று! யாரோ, ஒரு பையன் சேரியிலிருந்து வருகிறான் போலிருக்கிறது. அவன் பெயர் கண்ணனாக இருக்கவேண்டும். அந்தக் கண்ணனுக்கு வடை வேண்டுமென்று இவன் கேட்டான். நான் கொடுக்கவில்லை. இவன் திருடிக் கொண்டு போய்க் கொடுக்கப் போயிருக்கிறான். அவன் இவனைத் தூண்டியிருக்கிறான் போலிருக்கிறது.”

“ஆமாம், அவனை இவன் எங்கே பார்த்தான்?”

“அதுதான். ஒவ்வொரு நாளும் காலையில் பஜனைக்குக் குழந்தைகள் வருகிறார்களே, அங்கே சிநேகம் போலிருக்கிறது. கண்ணனாம்; குண்டு மூஞ்சியாம்; கறுப்பாம்...”

“கண்ணபிரானும் அப்படித்தானே இருப்பான் ?”

“ஓகோ! நீங்களும் சேர்ந்து கொண்டு விட்டீர்களா? பிள்ளைக்கு ஏற்ற அப்பாதான். இந்தக் கண்ணனே வேண்டாம்; அந்தச் சேரியிலுள்ள கண்ணபிரானையே கொண்டு வந்து உட்கார்த்திப் பூசை செய்து விட லாமே!”

நாராயணன் சிரித்துக் கொண்டார்; “நீ அந்தக் . கண்ணனென்கிற பையனையே கண்டு, ‘இவனை நீ கூப்பிடாதே, ஒன்றும் கேட்காதே என்று’ சொல்லு. இவனிடம் போய் இரையாதே. இன்னும் ஒன்று செய்தால் மிகவும் நன்றாயிருக்கும். நீ செய்ய வேண்டுமே!”

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

"அந்தக் கண்ணனக் கண்டுபிடித்து அவனுக்குப் பிரசாதம், தின்பண்டம், காசு எல்லாம் இவன் காணக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/25&oldid=1382768" இலிருந்து மீள்விக்கப்பட்டது